Friday 24 February 2012

            சமுதாயம் 
சிந்திக்கும் ஒருபொழுது 
சிதைந்து விடுகிறது 
சீர்கெட்ட சமுதாயத்தை
சிலநிமிடங்களிலே காணயிலே!
மனமானது அமைதியாக
இருந்தாலும் காணும் 
இன்னல்களை யாவும் 
குத்துகின்றன  மனதை !
உதயமாகும் எண்ணங்கள் 
உன்னதமானதாக அமைந்தால் 
சமுதாயத்தின் தீயவிழிகளை 
சிதைத்து சீர்படுத்தலாம் !
தன்னலம் மட்டுமே 
தன்னுரிமை மனிதனுக்கு 
தவறுகளை நீக்குவதற்கு 
தவறி விடுகின்றான் !
 
          உணர்த்தியவள் 
எனக்குள் இருந்த
என்னையே காட்டி
தோல்விகளை எல்லாம்
தொலைக்க செய்தல்
உலகம் இதுதான்
உள்ளம் அமைதிபெற
உண்மையை எனக்கு 
உணர்த்தி வந்தாள் !
காரணங்கள் தெரியாமல்
அலைந்தேன் திரிந்தேன் !
அடையாளம் காட்டி
அவையத்தை உணர்த்தினாள்! 
கண்ணீரோடு இருந்த
காலத்தை மாற்றி
இன்பமான நாட்களில்
இளைப்பாற வைத்தாள்! 
ஓராயிரம் கவிதைகள்
படைத்தேன்அதன்
ஆதாரமாக இருந்து
ஆனந்தம் கொண்டாள்!
                                 -மருத. கண்ணன்  

       மலரும் 
சருகின் ஓசையா
    எனது மொழி
மெருகேறும் மனம்
   என்றும் இனி
கருவென மாறும்
   உனது அன்பு 
உருவாக தோன்றும்
   உனது  நினைவு
               மருத. கண்ணன்
      

Friday 17 February 2012

innalakal

இன்னல்கள் 
பனிக்கட்டியாக
  கரையவேண்டியவை
கடலாக
  பெருகுகிறதே!
பனித்துளியாக
  மறையவேண்டியவை
பாரங்கற்காக
  குவிகிறதே !
மலரிதழாக      
  மென்மையாகவேன்டியவை 
மரப்பட்டையாக
கடினமகிறதே !

valvu

பட்டாம்பூச்சியின் 
பயணம் -வாழ்வு 

natpu

உன்னதமான நட்பு 
உறவுகள் உன்னை 
உதறி சென்றாலும் 
உண்மையான உள்ளங்கள் 
உனக்காக காத்திருக்கும் 
உன்னதமான நட்பின் 
உருவத்தில் தெய்வமாக !
உள்ளமானது மாறுபட்டு
உலவுகின்ற பொழுது 
உரக்க உரைக்கும் 
உள்ளார்ந்த மொழிகளில் !
உலகமே வெறுத்தாலும் 
உள்ளங்கையில் இருக்கும் 
உயிரான நெஞ்சத்தின் 
உண்மையான அன்பு !
    

naanam

 
      நாணம் 
என்னை கண்டு
வெட்கப்பட்ட
ஒருநொடி போடுமே !
என் பிறவியின்
கடைசி
கணங்கள் வரையில்
உனது நினைவுக்கு !
மௌனமாக
நீ சிரிக்க
மனதிற்கு
சிறைவாசம்
உன்னிடத்தில்!
மீளமுடியவில்லை  
     
மரணத்தை
காட்டிலும்
கொடுமையானது
மௌனமே!
அன்பானவர்களுக்கு
 மட்டும்

Wednesday 18 January 2012

manam

              மனம் 
உனது பெயரை 
   உச்சரித்த பிறகுதான் 
இசையின் இனிமையை 
     இன்பமாக ரசித்தேன் 
சொற்களின் பொருளை 
     சோதனையைக் கொண்டு 
ஆராய்ந்து அதனால் 
      ஆனந்தம் கொள்கிறேன் 
பார்க்கும் இடமெங்கும் 
       பால்போன்ற  உன்முகமே 
மனதில் தோன்றி 
      மறையாமல் நிற்கிறது 
கடைகளின் பெயர்பலகையில் 
     கண்கள் தேடுகின்றன 
இனிமையான உனது 
     இசையின் பெயரையே 
அடிக்கடி தோன்றி 
    அச்சுறுத்தி செல்கிறது
நினைவுகளில் உனது
    நெஞ்சார்ந்த அன்பு 
மற்றவற்றை நினைக்கவும் 
    மறந்து செல்கிறது 
மங்கையின் மேல்கொண்ட 
    மறவாத நெஞ்சம்
              தோன்ற வேண்டும் 
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் 
     உயர்ந்ததாக இருக்க வேண்டும் 
வெள்ளத்தின் போக்கினை நீக்கி 
      வேகத்தை கொண்டிடல் வேண்டும்
கள்ளமான மனதின் செயலை 
     கண்டு நீக்கிடல் வேண்டும் 
பள்ளமான நிலத்தையும் என்றும் 
     பயனடைய செய்தல் வேண்டும் 
குள்ளமான நோக்கத்தினை பிறர்க்கு 
      குற்றமற நெக்குதல் வேண்டும்